| ADDED : ஏப் 28, 2024 04:03 AM
தர்மபுரி: ஒரு மாதமாக நிலவி வரும், அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, வாகன போக்குவரத்து குறைந்து, தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி உள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த பிப்., முதல் வெப்ப நிலை, 32.2 செல்ஷியல், அதாவது, 90 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் தொடங்கி, 37.7 டிகிரி வெப்ப நிலையில் தொடங்கி தற்போது, 41.1 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 106 டிகிரி பாரன்ட்ஹீட் வரை அதிகரித்து, தர்மபுரி மாவட்டம் வெப்பம் மிகுந்த மாவட்டமாக மாறியது. இந்த தொடர் வெப்பநிலை காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகள் அதிவேகத்தில் வறண்டு விட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர் மட்டும் வற்றி வெப்ப சலனம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனல் பறக்கும் வெப்பத்தினால், வாகன போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில், இரவு நேரங்களில் மட்டும் சரக்கு வாகனங்கள் மற்றும் கார்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் உச்சகட்ட வெப்பத்தை தவிர்க்க, மக்கள் இரவு நேர பயணத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.