உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் கடும் அவதி

அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் கடும் அவதி

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை மின் தடை ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று நள்ளிரவு, 12:25 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. கடந்த மாதம், 28, 29, 30 ஆகிய நாட்களிலும் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும், கோடையின் புழுக்கம் தாங்க முடியாமல், அவதியடைந்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் மின்மோட்டாரை இயக்க முடியாமல், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுசேமிப்பு திட்டத்தில் மோசடி நகை கடைக்கு போலீசார் 'சீல்'

அரூர்: சேலம் மாவட்டம், வீராணம் அடுத்த சுக்கம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சபரிசங்கர், 40; இவர் சேலம் உட்பட, 6 மாவட்டங்களில், எஸ்.வி.எஸ்., ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை துவங்கி, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கடந்தாண்டு நவம்பரில் புகார் எழுந்தது. இதையடுத்து, அரூரில் செயல்பட்ட அதன் கிளை நகைக்கடை மூடப்பட்டது. இதில், சேமிப்பு திட்டத்தில், முதலீடு செய்தவர்கள் மற்றும் பல இடங்களில் செயல்பட்டு வந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவில், ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று, அக்கடைக்கு, தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை