மேலும் செய்திகள்
ரூ.2.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
23-Dec-2025
ரயில் மோதி இன்ஜினியர் பலி
23-Dec-2025
பென்னாகரம் தொகுதியில் பள்ளி கட்டடங்கள் திறப்பு
23-Dec-2025
பள்ளியில் ஆய்வக கட்டட பணி
22-Dec-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு, 25 மையங்களில் நடக்கவுள்ளது.இது குறித்து, கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா-ணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-, குரூப் 1 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தர்மபுரி மாவட்-டத்தில், 25 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. இதில், 8,314 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையங்களில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் நின்று செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்-லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்த்து, தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்வர்-களின் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் இன்று காலை, 8:30 முதல், 9:00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்-வர்கள் எக்காரணம் கொண்டும், மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
22-Dec-2025