உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முள்வேலியில் பைக் மோதிபஸ் கண்டக்டர் உயிரிழப்பு

முள்வேலியில் பைக் மோதிபஸ் கண்டக்டர் உயிரிழப்பு

மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்,24; அரசு போக்குவரத்து கழ-கத்தில் தற்காலிக கண்டக்டர். இவரது மனைவி ஸ்ரீமதி,23. இவர்-களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சாந்தகுமார் தனது ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக மல்லுப்பட்டி சென்று திரும்பும்போது, முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதினார். சாந்-தகுமார் பலத்தகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்-பத்திரிக்கு 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்-தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலே அவர் இறந்-துவிட்டதாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ