| ADDED : டிச 28, 2025 08:25 AM
அரூர்: அரூரில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், விபத்தை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டை கடந்தாண்டு, அக்., 24ல் அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதுடன், கார்கள், மினி சரக்கு வாகனங்கள் தாறுமாறாக ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. மேலும் வியாபாரிகள் தள்ளு வண்டிகளை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன், ஏற்பட்ட விபத்தில் தி.மு.க., நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் எளிதாக சென்று வரும் வகையில், வர்ணீஸ்வரர் கோவில் முதல், அம்பேத்கர் நகருக்கு செல்லும் பிரிவு சாலை வரையிலான, சாலையை விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.