உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தர்மபுரி : தர்மபுரியில், மக்கள் குறைதீர் நாளில் பொதுமக்களுக்கு இலவச-மாக மனு எழுதி தரும் தன்னார்வலர்களை, மாவட்ட கலெக்டர் சாந்தி பாராட்டு தெரிவித்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் நாள் முகாம் நடந்து வருகிறது. இங்கு வரும் மக்களுக்கு, மாவட்ட மகளிர் திட்ட தன்னார்வலர்கள், இலவச-மாக மனுக்களை எழுதி கொடுக்கும் சேவையை செய்து வருகின்-றனர். இவ்வாறு சேவை செய்து வரும் தன்னார்வலர்களுக்கு வச-தியாக, தர்மபுரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், நிழற்-கூடம் அமைத்து தரப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் சாந்தி, இவர்களின் சேவையை பாராட்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரி-வித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ராமகி-ருஷ்ணன், கிளை மேலாளர் லெனின், தொப்பம்பட்டி கிளை மேலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை