உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வளர்ச்சி திட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

வளர்ச்சி திட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, வளர்ச்சி திட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இந்திய ஐக்கிய கம்யூ., சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பட்டாபிராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், காவிரி, தென்பெண்ணை ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு நீரேற்றம் செய்து, புதிய நீர் பாசன திட்டங்களை உருவாக்க வேண்டும். வேளாண்மை வளர்ச்சிக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும். பழங்குடியினர் கிராமங்களுக்கு தார்சாலை அமைக்க வேண்டும். குன்றுகள், மலைகளை எம்.சாண்டாக மாற்றக்கூடாது. தர்மபுரி சிப்காட் வளாகத்தில், விவசாய தர்சார்பு தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை