உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்

பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்

அரூர்: அரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இது வரை 264 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இதுவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 66 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும், வார்டு உறுப்பினர்களுக்கு 183 பேரும் மனு தாக்கல் செய்தனர். மொரப்பூர் யூனியனில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 27 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இருவரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 125 பேரும் மனுதாக்கல் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும் மனு தாக்கல் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் சேர்மன் பதவிக்கு 26 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 10பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜா உள்ளிட்ட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்து பேரும் மனுதாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை