தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., ஆலோசனை கூட்டம் குறித்து, மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவாறும், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை படியும், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வின் தர்மபுரி, பென்னாகரம் சட்டசபை தொகுதி ஆலோசனை கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில், சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் தருண், கே.வி.குப்பம் கோபி, ஆகியோர் முன்னிலையில் நடக்க உள்ளது. இதில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி பேச உள்ளார்.அது சமயம் இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் , பி.எல்.ஏ., 2 நிர்வாகிகள் என, அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.தர்மபுரியில், மாவட்ட கட்சி அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கும், பென்னாகரத்தில் பி.டி.ஓ., அலுவலகம் அருகே, மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மாலை, 3:00 மணிக்கும் கூட்டம் நடக்கிறது. இதில், 'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' திண்ணை பிரசாரம் தொடங்குவது குறித்தும், மார்ச், -1ல் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் பேசப்பட உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.