மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
9 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
9 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
9 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
தர்மபுரி: தம்மனம்பட்டியில் உள்ள மாணிக்கவாசகர் மற்றும் நடராஜர் திருமடத்தில், 100 ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர் இறைவனோடு இரண்டற கலந்தார். அந்த நாளில், அனைத்து சிவ தலங்களிலும் குருபூஜை நடந்து வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தம்மனம்பட்டியில், மாணிக்கவாசகர் மற்றும் நடராஜர் திருமடம் உள்ளது. இதில், மாணிக்கவாசகரின், 100 ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. மாணிக்கவாசகருக்கு, 18 வகையான அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் நடந்தன. அடுத்த நிகழ்வாக, மகேஸ்வர பூஜையும், தொடர்ந்து திருமடத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் தம்மனம்பட்டி ஊர்மக்கள் செய்திருந்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
30-Dec-2025