உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லூரியில் கணித மன்ற விழா

அரசு கல்லூரியில் கணித மன்ற விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலைக்கல்லுாரியில் கணித துறை சார்பில், ராமானுஜன் கணித மன்றம் சிறப்பு சொற்பொழிவு முதல்வர் அன்பரசி தலைமையில் நடந்தது. துறை தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கோவை தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தரசு, 'சம் இன்ட்ரஸ்டிங் பிராப்ளம்ஸ் இன் மேத்தமேடிக்ஸ்' எனும் தலைப்பில் பேசினார். விழாவில் மாணவர்களுக்கு, வினாடி வினா நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை