உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்

ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில், புட்டிரெட்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. நேற்று இந்த ஸ்டேஷனில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், ஏற்காடு விரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண், 22649) மற்றும் மறு மார்க்கமாக ( வண்டி எண், 22650) ஏற்காடு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷ-னிலும், மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என, ரயில்வே குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், பயணிகள் வசதிக்காக கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், இருசக்-கர வாகனம் பார்க்கிங் மற்றும் ரயில்வே ஸ்டேஷனை துாய்மை வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்-டத்தில் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தில், ரயில்வே குழு உறுப்பினர்கள் சிற்றரசு, சரவணன் மெய்யறிவு, சேலம் ரயில்வே அதிகாரி சக்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ