உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கள்ளச்சாராயத்தை மூடி மறைத்ததால்தான் அதிக உயிரிழப்புகள்; பா.ம.க., சவுமியா

கள்ளச்சாராயத்தை மூடி மறைத்ததால்தான் அதிக உயிரிழப்புகள்; பா.ம.க., சவுமியா

தர்மபுரி : ''தமிழக அரசு கள்ளச்சாராயத்தை மூடி மறைத்ததால்தான், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது குறித்து, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,'' என, பா.ம.க., வேட்பாளர் சவுமியா கூறினார்.தர்மபுரி லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க, பா.ம.க., வேட்பாளர் சவுமியா நேற்று பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு வந்தார். முன்னதாக பழைய தர்மபுரி, முத்துகவுண்டன் கொட்டாய், சவுளூர், கொளகத்துார், குண்டலபட்டி கிராமங்களுக்கு சென்று ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது சவுமியா பேசுகையில்,'' தர்மபுரி லோக்சபா தொகுதியில், என்னை நம்பி தாயுள்ளத்தோடு அரவணைத்த மக்களுக்கு நான் சேவை புரிவேன். குடிநீர், விவசாயம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போராடுவேன். நான் தோல்வியுற்றாலும் எனக்காக ஓட்டு போட்ட லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி. இந்த மாவட்டத்தின்முன்னேற்றத்திற்காக தொடர்ந்து, குரல் கொடுத்து போராடுவேன்,'' என்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். தமிழக அரசு முன்கூட்டியே இது குறித்து, நடவடிக்கை எடுத்திருந்தால் அதிக உயிரிழப்புகள் நடந்திருக்காது. மூடி மறைத்ததால் நிறைய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு கெட்டபெயர் வரக்கூடாது என்பதற்காக, மக்களை பலிகடா ஆக்கியுள்ளனர். கள்ளச்சாராயமாக இருந்தால் என்ன, நல்ல சாராயமாக இருந்தால் என்ன, எதுவுமே தேவையில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை