| ADDED : ஏப் 18, 2024 07:08 AM
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசார பேரணி நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா தலைமை வகித்தார். தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன் துவங்கிய இப்பேரணி கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், ஸ்துாபி மைதானம், போலீஸ் ஸ்டேசன் வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை சென்றது. இதில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை, நல்லாட்சி அமைய கட்டாயம் வாக்களிப்போம், வாக்களிப்பது நம் அடிப்படை உரிமை, ஜனநாயகத்தை காக்க, 100 சதவீதம் வாக்களிப்போம் என கோஷமிட்டு பேரணியாக சென்றனர்.