உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி செய்து தர மக்கள் கோரிக்கை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி செய்து தர மக்கள் கோரிக்கை

அரூர், நதர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சோரியம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பகல் நேரத்தில் பள்ளி வளாகத்தினுள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து மேய்கின்றன. மேலும், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மர்ம நபர்கள் அங்கு மது அருந்துகின்றனர்.பின், அங்கேயே, தின்பண்டங்கள், காலி மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் இதைக்கண்டு அச்சமடைகின்றனர்.எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை