உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி, ஆண்டியூர் பகுதிகளில் சுத்தி-கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் நேற்று திறக்கப்-பட்டது.ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், பெரிய தள்ளப்பாடி பகுதிக்கு, 10 லட்சம் ரூபாய், ஆண்டியூர் பகுதிக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு இடங்களில் சுத்தி-கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார். ஊத்தங்கரை அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வந்தார். மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, சிறுபான்மையின இணை செய-லாளர் பியாரோஜான், ஊத்தங்கரை நகர செய-லாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் தில்லையப்பன், ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை