உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை-விநாயகர் கோவிலில், நேற்று காலை பல்வேறு வகையான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மூலவர் விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்ன-சாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்-வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில் உட்-பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள விநாயகர் கோவில்-களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !