உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 18ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதில், காலையில் கணபதி பூஜையை தொடர்ந்து, குமாரசாமிப்பேட்டை முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நேற்றிரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பின், மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்