உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆண்டிசுவாமி கோயில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

ஆண்டிசுவாமி கோயில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

நத்தம், : நத்தம் கவரயபட்டி ஆண்டிசுவாமி கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .கவரயபட்டி வெள்ளைமலை மேல் உள்ள ஆண்டிசுவாமி கோயில் திருவிழா 7 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். இவ்விழா நேற்று முன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு கனி எடுத்து வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூஜை படையல் படைத்து வழிபட்டனர். பின்னர் கிராம தெய்வங்கள் வீதி உலா வந்து உத்தரவு கொடுத்தல் நடந்தது. இதை தொடர்ந்து அறுசுவை அன்னதானம் மதியம் முதல் இரவு வரை நடந்தது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கவரய பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை