உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை, : மின் கட்டண உயர்வை கண்டித்தும்,இதை வாபஸ் பெறவும், ரேஷன் கடையில் பாமாயில், பருப்புகளை வழங்கவும், காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்றுத்தர வலியுறுத்தி நிலக்கோட்டையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் முத்துக்காளை, பொருளாளர் மாசாணம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் வெள்ளைச்சாமி, பழனி, மாநில தொண்டரணி துணை செயலாளர் முருகன் பேசினர். துணைச் செயலாளர்கள் ஜெர்மன் ராஜா, நித்யா முருகேந்திரன், கலைச்செல்வன், கணேசன், ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி, மணிமுருகன், முத்து, ஆனந்தகுமார் பங்கேற்றனர். நகரச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி