உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

தாடிக்கொம்பு: கலந்தாய்வை பழைய முறையில் நடத்த கோரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பழைய முறையில் இருந்து மாற்றப்பட்டு மாநில அளவிலான கலந்தாய்வாக நடைபெற்று வருகிறது. வெறுப்படைந்த ஆசிரியர்கள் அரசாணை 243 ஐ ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி கலந்தாய்வை நடத்த கோரி டிட்டோஜாக் சார்பில் போராடி வருகின்றனர். இருந்தும் அரசு செவி சாய்க்காத நிலையில் வெறுப்படைந்த ஆசிரியர்கள் ஜூலை 8 முதல் ஜூலை 31 வரை வகுப்பறைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ