உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 59,615 பேர் எழுதுகின்றனர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 59,615 பேர் எழுதுகின்றனர்

திண்டுக்கல் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூன் 9ல் நடக்கும் குரூப் 4 போட்டித்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 228 மையங்களில் 59,615 பேர் எழுதுகின்றனர். இதன் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மையங்களை கண்காணிக்க 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் அன்று காலை 9 :00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தடையின்றி மின் விநியோகம் செய்யவும், தேர்வு முன்பு, முடிந்த பின்பும் கூடுதல் பஸ்கள் இயக்க கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி