உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாரசந்தையில் புகுந்த காட்டுமாடு ஓய்வு; ஆசிரியர் காயம்

வாரசந்தையில் புகுந்த காட்டுமாடு ஓய்வு; ஆசிரியர் காயம்

கொடைக்கானல் : கொடைக்கானல் வார சந்தையில் புகுந்த காட்டுமாடு தாக்கியதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலத்த காயமடைந்தார். வனத்துறை அதிகாரிகள் காட்டுமாடுகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகரை ஒட்டி வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்குகளுக்கு தேவையான உணவு,தண்ணீர் இல்லாத சூழலில் நகர் பகுதியை நோக்கி வருகின்றன. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் ஜனரஞ்கமான ரோட்டோரங்களில் காட்டு மாடுகள் நடமாடுவது வாடிக்கையாகிவிட்டது. இதை கட்டுப்படுத்த கடந்தாண்டு நான்கு பேர் கொண்ட தனிக் குழுவை வனத்துறை அமைத்தது. சில மாதமாக இக்குழுவின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. கொடைக்கானல் பி.டி. ரோட்டில் வார சந்தை நேற்று மாலை நடந்தது. இங்கு ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க குவிந்த நிலையில் சந்தையில் புகுந்த காட்டுமாடால் மக்கள் பீதியடைந்தனர். இதில் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மூர்த்தியை 75, காட்டு மாடு தாக்கி அவர் காயமடைந்தார். கொடைக்கானல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் இரவில் சென்ற சிவக்கொழுந்து என்ற உள்ளூர் நபர் காட்டுமாடு தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தார். தொடர்ந்து காட்டுமாடு தாக்கப்படுவதும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. வனத்துறையின் மெத்தனப்போக்கால் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி தொடர்கின்றன. மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை