உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வட்டக்கானல் அருவியில் ஆர்ப்பரிக்கும் பயணிகள் கண்டுகொள்ளாத வனத்துறையால் விபத்து அபாயம்

வட்டக்கானல் அருவியில் ஆர்ப்பரிக்கும் பயணிகள் கண்டுகொள்ளாத வனத்துறையால் விபத்து அபாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானல் அருவியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ரசிப்பது வழக்கம். நகருக்கு மிக அருகில் உள்ள இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு பாதுகாப்பு வசதிகள் என்பது அறவே இல்லாத நிலையில் பெயரளவிற்கு வனத்துறை அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை மட்டுமே வைத்துள்ளனர்.கண்காணிப்பு பணி, சிசிடிவி கேமரா வசதி செய்யவில்லை. மாறாக இப்பகுதியை வைத்து வருவாய் ஈட்டும் சுற்றுலா வழிகாட்டிகளும் ஆபத்தை பயணிகளுக்கு உணர்த்துவதில்லை. நாள்தோறும் பயணிகள் அருவியின் மையப் பகுதியில் சென்று குளிப்பது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்த அருவியின் மையப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் மீது மரம் விழுந்து உயிர் பலி ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளும் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படாத நிலையில் வனத்துறைக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி இப்பகுதியில் பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி