உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : பிரதமர் மோடி, பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை இழிவுபடுத்தி பேசி வரும் காங்., மாநில தலைவர் செல்வ பெருந்தகை, லோக்சபாவில் செங்கோல் குறித்து பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசனை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார்.பொருளாளர் மணிகண்டன் வரவேற்றார. பொதுச் செயலாளர்கள் கோவிந்தராஜ், கங்காதரன், சொக்கர் முன்னிலை வகித்தனர். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், மாவட்ட பார்வையாளர் ரவிபாலா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல்சாமி, போஸ் பேசினர். மாவட்ட துணைத் தலைவர்கள் உமா மகேஸ்வரி, மல்லிகா, வீரஜோதி,மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வேல்முருகன், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி ,பிரிவு தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.நகர் மேற்கு தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை