உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமலைக்கேணியில் சதுர்த்தி விழா

திருமலைக்கேணியில் சதுர்த்தி விழா

நத்தம்: -நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னிதியில் ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகபெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைநடந்தது. மேலும் சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன் கோயில் லட்சுமி விநாயகர், கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி,பெரிய விநாயகர், வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட நத்தம் பகுதிக விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ