| ADDED : மார் 29, 2024 06:09 AM
நீர் தேக்க தொட்டி சேதம்சாணார்பட்டி அருகே காவிரிசெட்டிபட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது .சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் அச்சுறுத்தல் உள்ளது .அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமு, காவேரிசெட்டிபட்டி...............-------டூவீலர்களால் இடையூறுதிண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது . இதனால் பஸ்களை ரேக்குகளில் நிறுத்த முடியாமல் நடுவில் நிறுத்துகின்றனர் .பயணிகள் சென்றவர சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். கோபி, திண்டுக்கல்..........--------மீட்டர் பெட்டியால் விபத்துதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே திறந்த நிலை மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது. மீட்டர் பெட்டி தாழ்வாக சிறுவர்கள் தொடும் துாரத்தில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன் இதனை உயரத்தில் அமைக்க மின் துறை முன் வர வேண்டும். பாலச்சந்தர், திண்டுக்கல்..........--------பட்டுப்போன மரத்தால் விபத்துதாடிக்கொம்பு - குளத்துார் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் செல்வோர் ஒரு வித அச்சத்தில் உள்ளனர். மரத்தை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .ராதா , தாடிக்கொம்பு.............---------திறந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிதிண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் பின்புற ரோட்டில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளதால், இரவில்செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. இந்த வழியில் மாணவர்கள் அதிகம் செல்வதால் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும். ஏஞ்சல், திண்டுக்கல்..........---------தெருவில் கழிவுநீர் தேக்கம்அடியனுாத்து ஊராட்சி எஸ். எஸ். நகர் ஏழாவது தெருவில் கழிவுநீர் தேங்கி குளம் போல் நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கடந்து செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவு நீர் ஓடையை சரி செய்ய வேண்டும். சின்னதம்பி, அடியனுாத்து....................----------அகற்றப்படாத குப்பைதிண்டுக்கல் கூட்டுறவு நகரில் குப்பையை அகற்றாமல் பல நாட்களாக அப்படியே கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .இது ரோடெல்லாம் சிதறி கிடப்பதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன், கூட்டுறவுநகர்............------------