உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கட்டட பணியில் தாமதம்; தொல்லை தரும் லொள்

ரேஷன் கட்டட பணியில் தாமதம்; தொல்லை தரும் லொள்

பழநி, : தொல்லை தரும் 'லொள் ' ,ரேஷன் கட்டட பணியில் தாமதம் ,போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதி என பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.சிவகுரு தெரு, தியாகி குமரன் தெரு, சுப்ரமணியபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, காமராஜர் தெரு, தேவாங்கர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் காந்தி மார்க்கெட் பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருதி விரைவாக கட்டுமான பணிகளை நிறைவேற்ற வேண்டும். சாலைகளும் சேதமடைந்துள்ளன. கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது. கச்சேரி புது தெருவில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கின்றனர். ராஜாஜி சாலையில் கனரக வாகனங்கள் நேர கட்டுப்பாட்டை அறிவித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கட்டட பணியில் தாமதம்

கதிர் ராஜ், இ சேவை மைய உரிமையாளர், ராஜாஜி சாலை : பல ஆண்டுகளாக ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய கடை கட்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. புதிய கட்டடம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள் தொல்லையும் அதிகம்

பாலாஜி சிவம், அர்ச்சகர், தேவாங்கர் தெரு : நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் சுகாதாரம் ஏற்படும். முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக இந்த வார்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள்தொல்லையும் அதிகம் உள்ளது.

தேவை கண்காணிப்பு கேமரா

சபரிஹரி, அலைபேசி கடை உரிமையாளர் : நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் இங்கு மார்க்கெட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. வெளிநபர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராவை அதிகப்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.

துார்வாரப்படும் சாக்கடைகள்

காளீஸ்வரி ,கவுன்சிலர், (தி.மு.க.,) : வார்டில் குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். புதிய ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து தொடர்ந்து அடிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாக்கடைகள் துார்வாரப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை