உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதையில்லா தமிழகம் வீடியோ ஆவணப்படுத்துங்க ; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

போதையில்லா தமிழகம் வீடியோ ஆவணப்படுத்துங்க ; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

திண்டுக்கல்: ஆக. 12ல் நடக்க உள்ள போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் நடக்க உள்ள உறுதிஏற்பு, ஊர்வலம் போன்றவற்றை வீடியோவாக ஆவணப்படுத்த கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.திண்டுக்கல்லில் நடந்த போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: : போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நடக்க உள்ள நாளன்று தேவையான முன்னேற்பாடுகள் ,பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். பள்ளி , கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் 30-45 நிமிடங்கள் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான மேடைப்பேச்சு, கட்டுரைப்போட்டி, நாடகம் போன்றவற்றை நடத்தி வீடியோவாக ஆவணப்படுத்த வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸாருடன் இணைந்து பொது இடங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்திட வேண்டும்.உறுதிமொழியேற்பு தொடர்பான விபரத்தினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் புகைப்படங்களுடன் உரிய படிபத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை