உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் பவுர்ணமி வழிபாடு

கோயில்களில் பவுர்ணமி வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் நேற்று பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநிரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பங்குனி மாத பவுர்ணமி என்பதால் சிறப்பு விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிேஷகம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாடிகொம்பு சவுந்தராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை