உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புவி வெப்பமயமாவதை தடுக்க வீட்டிற்கு ஒரு மரம் வளருங்கள்: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

புவி வெப்பமயமாவதை தடுக்க வீட்டிற்கு ஒரு மரம் வளருங்கள்: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

ஒட்டன்சத்திரம் : ''புவி வெப்பமயமாவதை தடுக்க அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்'' என,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.திண்டுக்கல் ஸ்ரீ அட்சயா அறக்கட்டளை சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் இதுவரை 13 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அவை நன்றாக வளர்கிறது. அதேபோல் இந்த வருடம் 35 லட்சம் மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தயாராக உள்ளது. புவி வெப்பமயமாவதை தடுக்க அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றார்.அமைச்சர் சக்கரபாணிக்கு 'பசுமை நாயகர்' விருதை தேனி மாவட்ட நீதிபதி கருணாநிதி வழங்கினார். பசுமை நாயகர் என்ற புத்தகத்தின் முதல் பிரதியை நீதிபதி வெளியிட அதை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் பெற்றுக் கொண்டார். அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. சென்னை வருமான வரித்துறை முன்னாள் ஆணையாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஸ்ரீஅட்சயா அறக்கட்டளை முதன்மை ஆலோசகர் ஜீவானந்தம் வரவேற்றார். தேனி பட்டிமன்ற நடுவர் வசந்த நாராயணன்,மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், சக்தி கல்வி நிறுவனங்கள் சேர்மன் வேம்பணன், ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் குப்புசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை