உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதாகி போலீஸ் காவலில் உள்ள சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரிக்கின்றனர்.திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகராட்சி கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய இவர் ரூ.4.66 கோடி கையாடல் செய்தார். கைதான சரவணனை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி அலுவலகம்,சரவணனின் வீடு என போலீசார் சோதனை நடத்தினர். பணத்தை செலவு செய்ததன் வழி குறித்தும் சரவணனிடம் விசாரணை நடக்கிறது. இதோடு சரவணனுக்கு சில மாதங்களுக்கு முன் கடன் கொடுத்தவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரிக்கின்றனர். இதனிடையே சரவணனை காவலில் எடுத்த போலீசார் இன்று மதியம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்