உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் ஊழியரை முன்விரோதத்தில் கொலை செய்த வழக்கில் மூவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது சகோதரியை அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார்,என்பவர் 2013ல் திருமணத்திற்காக பெண் கேட்டு சென்றார். அசோக்குமார்,மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் செல்வகுமார்,குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து 2013ல் அசோக்குமார்,தன் நண்பர்களான சக்திவேல்,அன்புராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து செல்வகுமாரை.கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே உள்ள கலையரங்கம் அருகே செல்வகுமார்,நடந்து சென்றபோது மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். தாடிக்கொம்பு போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக சூசைராபர்ட் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மெகபூப்அலிகான்,குற்றவாளிகள் அசோக்குமார்,சக்திவேல்,அன்புராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலா ரூ.10000 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி