உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

கொடைக்கானலில் புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் சார்பில் 7 புதிய பஸ்கள் வழித்தட துவக்க விழா நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சச்சிதானந்தம் எம்.பி., போக்குவரத்துக்கு கழக நிர்வாக மேலாளர் ஆறுமுகம், பொது மேலாளர் துரைச்சாமி, உதவி மேலாளர்கள் சக்தி, சத்தியமூர்த்தி, யுவராஜ், துணை மேலாளர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.விழாவில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கமிஷனர் சத்தியநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எம். எல். ஏ., பேசுகையில்,'' பழநி திருப்பதி இடையே ஆன்மிக பஸ், புதிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள், ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் இடையே கூடுதல் பஸ் , கொடைக்கானல் வேளாங்கண்ணி இடையே பஸ் சேவைகளும் துவங்க உள்ளது ''என்றார். கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ