உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோரத்தில் கவிழ்ந்த கார்

ரோட்டோரத்தில் கவிழ்ந்த கார்

வேடசந்துார் சேலத்தை சேர்ந்தவர் முன்னாள் பார் கவுன்சில் தலைவர் முத்துசாமி 60. வழக்கு சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றம் சென்று விட்டு சேலத்தை நோக்கி காரில் சென்றார். சேலத்தை சேர்ந்த பாலாஜி 42, ஓட்டினார். நேற்று மாலை 4:00 மணிக்கு வேடசந்துார் விருதலைப்பட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. முத்துச்சாமி வலது கால் துண்டாக முறிந்த நிலையில் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவர் பாலாஜிக்கு கையில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இருவரையும் மீட்டு வேடசந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துசாமி இறந்தார். கூம்பூர் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி