உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்........

போலீஸ் செய்திகள்........

மனைவியை வெட்டிய கணவர்திண்டுக்கல்: ஆரோக்கியமாதாகோவில் தெருவை சேர்ந்த தனியார் ஊழியர் அந்தோணி மிக்கேல்ராஜ்42. இவரது மனைவி சீமா27. இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிறது. சீமா கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கினார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று தகராறு முற்றியநிலையில் அந்தோணி மிக்கேல்ராஜ்,மனைவியை கத்தியால் வெட்டினார். வடக்கு போலீசார் கைது செய்தனர்.பெண் தற்கொலைதிண்டுக்கல்: பாலகிருஷ்ணாபுரம் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் கோபிநாதன். மே 26ல் கரூருக்கு டூவீலரில் செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்தார். இவரது மனைவி விஜி மன விரக்த்தியில் இருந்தார். நேற்று விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் தாக்கி பலிதிண்டுக்கல்: குட்டத்துப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி சேசு ஆரோக்கியம்,மனைவி மெட்டிட்லா மேரி40. இருவரும் மே27 ல் முத்தனம்பட்டி பிரிவு பகுதி கட்டட பணியில் ஈடுபட்டனர். அப்போது மெட்டில்டாமேரி மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.தம்பதி தர்ணாசின்னாளபட்டி : கொடைரோடு பள்ளபட்டியைச் சேர்ந்த அழகர் ,மனைவி தங்கபாண்டியம்மாள் இருவரும் ஒராண்டுக்கு முன்பு டூவீலரில் அம்பாத்துறை அருகே சென்றபோது மற்றொரு டூவீலரில் வந்த நபர்கள் தங்கபாண்டியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர் . போலீஸ் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழலில் மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து அம்பாத்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இருவரும் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்கு விசாரணையில் உள்ளதாக கூற கலைந்தனர்.பிளைவுட் கடையில் தீதிண்டுக்கல் : மேட்டுப்பட்டி சந்தைரோடு பகுதியை சேர்ந்தவர் ராம்சிங். பிளைவுட் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கடையில் தீப்பிடித்து எரிந்தது. திண்டுக்கல் தீயணைப்பு உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தெற்கு போலீசார் விசாரணையில் மின்கசிவால் தீப்பற்றியது தெரிந்தது.400 கிலோ குட்கா பறிமுதல்திண்டுக்கல் : திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,போலீசாருடன் இணைந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பெங்களூருவிலிருந்த கடத்தி வந்து செம்பட்டி அருகே கோடவுனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். ஜே.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரி தப்பினார். 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.இருவர் தற்கொலைதாண்டிக்குடி: குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் விஜய் 17. பண்ணைக்காடு மூலையாற்றில் நடந்த திருவிழாவிற்கு உறவினர் வீட்டிற்கு வந்த போது,அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒரு தலை பட்சமாக காதலித்துள்ளார். அவர் மறுக்கவே விரக்தியடைந்த விஜய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.தாடிக்கொம்பு : கள்ளிப்பட்டியில் வசிப்பவர் தனியார் ஆலை தொழிலாளி மணிமுத்து 27. இவருக்கு திருமணம் ஆகி ஒராண்டு ஆகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் விவசாயி பலிஎரியோடு : புளியம்பட்டியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் 55. டூவீலரில் திண்டுக்கல் கரூர் ரோட்டில் (ஹெல்மெட் அணியவில்லை) புளியம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் சென்றபோது ரோட்டோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.காதல் ஜோடி தஞ்சம்வேடசந்துார்: உலகம்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவி நிஷாமேரி 19, குட்டத்து ஆவாரம் பட்டி ஆட்டோ டிரைவர் அருளப்பன் 25, இருவரும்காதலித்தனர். இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 27ல் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாதா கோயிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கினர். பெண்ணின் தாயார் புகாரில் வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் காதல் ஜோடியை அழைத்து வந்தார். இரு வீட்டாருடன் நடத்திய பேச்சு வார்த்தையில், சம்மதம் தெரிவிக்க பெற்றோருடன் மணமக்களை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை