| ADDED : ஜூலை 09, 2024 05:53 AM
திண்டுக்கல்: போஸ்ட் ஆபீஸ்களில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சத்துக்கு விபத்து காப்பீட்டு வசதியை ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 தவணைத் தொகை செலுத்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கூறியதாவது: அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 தவணைத் தொகை செலுத்தி ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 15 முதல் 65 வயதுக்குள்பட்டவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.விண்ணப்பபடிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி, போஸ்ட் மேன் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இந்த காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலேசானை, விபத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.1 லட்சம், திருமண செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை என பல்வேறு பலன்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.