உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டெய்லர் கொலை: இருவர் கைது

டெய்லர் கொலை: இருவர் கைது

நத்தம்: நத்தத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்ற 2வதுமனைவி,கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.நத்தம் சுங்கச்சாவடி தெருவை சேர்ந்த காஜா பட்டன் அடிக்கும் தொழில் செய்பவர் சரவணன்55. இவருக்கு கார்த்திகா46,சித்திரைச்செல்வி35 என 2 மனைவிகள் உண்டு. 2வது மனைவி சித்திரை செல்வி, நத்தத்தை சேர்ந்த சலீம் என்பவருடன் பழகினார். இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்தனர். இதைப்பார்த்த சரவணன் ஆத்திரமடைந்து மனைவி செல்வியை, கண்டித்தார். இதனால் நேற்று முன்தினம் காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் சித்திரைச் செல்வி தனது கள்ளக்காதலனான சலீமை,அழைத்தார். இருவரும் சேர்ந்து சரவணன் துாங்கும் போது கழுத்தை நெரித்து,தலையணையால் அமுக்கி கொலை செய்தனர். பின் விட்டு வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சித்திரைச் செல்வி, அவரது கள்ளக்காதலன் சலீமையும் கைது செய்தார். விசாரணையில்,நாங்கள் கடந்த சில மாதங்களாக உல்லாசமாக இருந்தோம். அதற்கு சரவணன் இடையூறாக இருந்தார். அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததும் அவரை கொலை செய்தோம் என வாக்குமூலம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை