| ADDED : ஆக 07, 2024 05:52 AM
வடமதுரை : திண்டுக்கல், வடமதுரை, நத்தம் பகுதியில் நேற்று காலை 11:10 மணிக்கு மீண்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, வேடசந்துார், நத்தம் ,சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போலவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெடிச்சத்தத்திற்கு பின்னர் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போரிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது வெடிச்சத்தம் நீண்ட துாரத்திற்கு கேட்கிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.கல் குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும் நேரத்தையொட்டியே இந்த வெடிச்சத்தம் கேட்கிறது. இதனால் பலமற்ற, பழமையாக கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கல்குவாரி வெடிகளால் தான் பலத்த சத்தம் வருகிறது என்றால் வெடிப் பொருட்களின் அளவுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.