உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

திண்டுக்கல்:திண்டுக்கல் நாயக்கர் புது இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46. தனியார் நிறுவன பொருட்கள் விற்பனை வினியோகஸ்தராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தோடு வீட்டின் மாடியில் துாங்கினார். இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து அங்கிருந்த 8 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை கீழே வந்து பார்த்தபோது இது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை