உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்., கல்லுாரியில் 2கே24

என்.பி.ஆர்., கல்லுாரியில் 2கே24

நத்தம் : -நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பைன்ஸ்ட்ரா 2கே24 போட்டிகள் நடந்தது. மாணவி ரபீனா வரவேற்றார். 18 கல்லுாரிகளைச் சார்ந்த 501 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களின் பொருட்காட்சி ,சாளரக் காட்சி நடந்தது. போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற மதுரை பாத்திமா கல்லுாரி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. மதுரை லேடி டோக் கல்லுாரி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு , பாராட்டுச் சான்றிதழ்களை என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன், மேலாண்மை துறை தலைவர் வேல்முருகன் வழங்கினர். மாணவி பிரித்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை