| ADDED : ஜன 24, 2024 05:30 AM
எரியாத கோபுர விளக்குதிண்டுக்கல்- திருச்சி ரோடு முள்ளிப்பாடி செட்டியபட்டிப் பிரிவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பத்து நாட்களாக எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. விபத்துகள் நடக்கும் முன்பே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.................------கழிவுகளால் கொசுக்கள்வடமதுரை ஆதம்ஸ் நகர் இரண்டாவது தெருவில் சாக்கடை பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுதேங்கி கொசு, விஷ பூச்சிகள் அதிகரிப்பால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் கழிவு தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும். - ஜெயபால், வடமதுரை.................------குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்ஒட்டன்சத்திரம் கே.ஆர் .அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள திண்டுக்கல் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வெளியேறுகிறது .இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவச்சந்திரன் ஒட்டன்சத்திரம்.............-------- நாய்களால் அச்சம்திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அஞ்சலி ரவுண்டானா அருகே சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் ,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே கூட்டமாக நாய்கள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சித், திண்டுக்கல்......................--------பெயர் பலகையால் அவதிபழநி அடிவாரம் ரவுண்டானா அருகே பெயர் பலகை அழிந்து உள்ளதால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர் .பெயர் அழிந்துள்ள பலகையால் பெயர் தெரியாமல் வாகன ஓட்டிகள் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக் வேண்டும்.அன்னபூரணி, பழநி..............--------குப்பையால் சுகாதாரக் கேடுதிண்டுக்கல் நந்தவனப்பட்டி சர்வீஸ் ரோடு அருகே குவிந்துள்ள குப்பை பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார். திண்டுக்கல்...............---------திறந்த வெளி சிறுநீர் கழிப்பால் தொற்றுதிண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் மூக்கை பிடித்தப்படி செல்கின்றனர் .சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வேண்டும்.மணிவண்ணன், திண்டுக்கல்..............---------