உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம் : -நத்தம் சேத்துார் ஊராட்சி கரந்தமலை வனப்பகுதியில் உள்ள வலசை ஆத்துக்காடு வடக்கு சூழ பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவையொட்டி முன்னதாக திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை, காவிரி உள்ளிட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள்,முளைப்பாரி கோவில் முன் உள்ள யாகசாலைக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டது. நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் மூன்று கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன், சேத்துார் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை