உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

வேடசந்துார்,: வேடசந்துாரில் அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம், கொத்தடிமை தொழிலாளர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா, அமைதி தொழிற் பயிற்சி மைய முதல்வர் மெர்சி முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப் பாளர் பவித்ரா, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில செயலாளர் சக்திவேல் பேசினர். கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அறக்கட்டளை பணியாளர்கள் மணிமேகலை, சங்கீதா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ரேணுகாதேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை