உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் தடை புகையிலை பதுக்கி விற்பனை: 15 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல்லில் தடை புகையிலை பதுக்கி விற்பனை: 15 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தடை புகையிலை பதுக்கி விற்பனை செய்த 15 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து ரூ.3.50 லட்சம் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் நகர்,புறநகர் சுற்று வட்டார பகுதிகளில் தடை புகையிலை பொருட்களை உணவு பொருட்களோடு வெளியில் தெரியாதவாறு சில கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி,கண்ணன்,சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், செட்டிநாயக்கன்பட்டி,எரியோடு,வேடசந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது வேடசந்துார் பகுதியில் செயல்படும் ஒரு கடையில் ஆய்வு செய்தனர். நீண்ட நேரம் ஆகியும் எந்த பொருட்களும் பிடிபடவில்லை. இதனால் சோர்வடைந்த அதிகாரிகள் குவித்து வைத்திருந்த மிச்சர் போன்ற உணவு பொருட்களில் சோதனை செய்தனர். அப்போது அதனுள் 100க்கு மேலான தடை புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 15 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.3.50 லட்சம் அபராதம் விதித்தனர். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் நடக்க இருப்பதாகவும் உணவு பொருட்களில் புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கண்டு பிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி