உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் கரடி;விவசாயிகள் அச்சம்

கொடை யில் கரடி;விவசாயிகள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் கும்புக் காடு பகுதியில் கரடி நடமட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.சில மாதங்களாக கும்புக்காடு புதர் நிறைந்த பகுதிகளில் ஒற்றைக் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயத் தோட்டங்களில் ஏராளமானோர் வசிக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ஐயர் தோட்டத்து வீட்டில் கரடி புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து இங்குள்ள விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் மூங்கில்பள்ளம் பகுதியில் ஒரு பெண்ணை கரடி தாக்கி அவர் பலியானார். தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மன்னவனுார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதும் வனத்துறையினர் அமராவதி புலிகள் காப்பக பகுதியில் வருவதாக கூறுகின்றனர். விவசாயிகள் நாள்தோறும் அச்சுறுத்துலுடன் கும்புக்காடு பகுதியை கடந்து செல்கின்றனர். வனத்துறையினர் கரடியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை