உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு

ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் அறிக்கை: தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நிலுவை கேட்பு மனுக்களின் ஆவணங்களை மீள இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 2023 டிசம்பர் 2 க்கு முன்பாக விண்ணப்பம் செய்து நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை