உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அயோத்தி கும்பாபிேஷகத்தன்று வடமதுரை ஓட்டலில் இலவச உணவு

அயோத்தி கும்பாபிேஷகத்தன்று வடமதுரை ஓட்டலில் இலவச உணவு

வடமதுரை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வடமதுரை ஒட்டல் ஒன்றில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அன்பு பெயரில் ஓட்டல் நடத்துபவர் ஏ.மகேஷ்வரன். 500 ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்தியில் மீண்டும் பிரமாண்டமாக உருவாகியுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வடமதுரையில் இயங்கும் தனது ஓட்டலில் வழக்கமான முறையில் டேபிளில் அமர வைத்து சைவ உணவு பரிமாறி பில் தொகை பெறாமல் அனுப்பலாம் என திட்டமிட்டார். ஆனால் பலரும் வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பார்சல் முறையில் தருவது என திட்டத்தை மாற்றினார். ஓட்டல் முன்பாக அயோத்தி கும்பாபிஷேக தகவல், சுவாமி படத்துடன் பேனர் வைக்கப்பட்டது. இதையடுத்து காலை 10:30 மணி முதல் ஓட்டலுக்கு வந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ