வேடசந்துார் : வேடசந்துார் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடப் பணிகள் ரூ 5.75 கோடி மதிப்பிலும், தார் ரோடு அமைக்கும் பணிகள் ரூ.4.25 கோடி திட்ட மதிப்பிலும் அமைப்பதற்கான பணிகளை காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வேடசந்துார் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான வசதிகள் இல்லை. 2023ல் வேடசந்துாருக்கு வந்த மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியத்திடம் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் கோரினார். இதைத் தொடர்ந்து விபத்து ,அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் கட்ட ரூ. 5.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீ ராமாபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி பகுதியில் இரண்டு இடங்களில் தார் ரோடு அமைக்கும் பணிகளுக்கு ரூ.4.25 கோடி திட்ட நிதி ஒதுக்கப்பட்டது .இதை தொடர்ந்து நடந்த விழாவில் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் கட்டடப் பணிகள காந்தி ராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஒன்றிய துணைத் தலைவர் தேவசகாயம், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூராட்சி தலைவர்கள் மேகலா, பழனிச்சாமி, முத்துலட்சுமி, கருப்பணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி, மாவட்ட துணை செயலாளர் தாமரைச்செல்வி, தி.மு.க., பேச்சாளர் முருகவேல்,தி.மு.க., நிர்வாகிகள் கதிரவன், சவுந்தர், கார்த்திகேயன், ராமச்சந்திரன், கவிதா முருகன், ஆரோன், பூபதி மாரிமுத்து, காட்டு பாவா சேட், மணிமாறன், சுப்பிரமணி, மருதபிள்ளை, பொன்ராம், ராஜலிங்கம், நாகப்பன், ஜெயபாஸ்கர், தினேஷ், கரி முல்லா, சிவசாமி, முருகன், மனோஜ் கார்த்திக், செந்தில்குமார், காங்., பேரூராட்சி கவுன்சிலர் கமலக்கண்ணன் பங்கேற்றனர்.