உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மிட்டாய் வியாபாரி என புகையிலை பதுக்கல்

மிட்டாய் வியாபாரி என புகையிலை பதுக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் சேட் 55. இவர் அப்பகுதியில் மிட்டாய் வியாபாரம் செய்வதாக கூறி மக்களுக்கு தெரியாமல் தன் வீட்டில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தார். திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சரவணகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், ஜாபர் சாதிக் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நாகணம் பட்டியில் உள்ள ஹக்கீம் சேட் வீட்டிற்கு சென்றனர். அவர் வீட்டில் இல்லாததால் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையின் போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான 300 கிலோ புகையிலை பொருட்கள் மூலைகளில் பதிக்க வைத்திருந்தது தெரிந்தது. அதிகாரிகள் அங்கிருந்த புகையிலை பொருட்கள், வீடு, காரை பறிமுதல் முதல் செய்தனர். தலைமுறைவான ஹக்கீம் சேட்டின் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி